Header Ads

Breaking News

அஜித் 61-வது படத்தின் தலைப்பு வளவன் அல்லது வாமனன், The title of Ajith 61st film is Valavan or Vamanan

 அஜித் 61-வது படத்தின் தலைப்பு வளவன் அல்லது வாமனன்

அஜித் 61-வது படத்தின் தலைப்பு வளவன் அல்லது வாமனன், The title of Ajith 61st film is Valavan or Vamananதமிழ் திரையுலகில் நடிகர் அஜித்திற்கு வெறித்தனமான ரசிகர்கள் பலர் உள்ளனர். நடிகர் அஜித் குறித்த சிறிய தகவல் என்றாலும் அதனை உலகளவில் டிரெண்ட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பொதுவெளியில் அவர் இருக்கும் புகைப்படம், ரசிகர்களுடன் அவர் எடுத்து கொண்ட  புகைப்படம்என்று ஏதாவது ஒன்று கிடைத்தால் போதும் ஒரு வாரத்திற்கு அவர்களுக்கு விருந்தாக இருக்கும்.


எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை (Valimai). இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 


அஜித்துக்கு (Ajith Kumar) ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை (Valimai) படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கி இருந்த நிலையில் ஐதராபாத்தில் இணைப்புக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏறக்குறைய இரண்டு வருடங்களாக இந்த படம் பற்றி எந்தவித தகவலும் வெளியிடாமல் இருந்து வந்த படக்குழு தற்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை மோஷன் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவற்றை ரிலீஸ் செய்தது.


இதற்கிடையில் வலிமை படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர். 


இந்நிலையில் தற்போது முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் அஜித்தின் 61-வது படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. அதன்படி இப்படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். ஏற்கனவே அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத் மீண்டும் அஜித்துடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


அதன்படி அஜித் நடிக்க உள்ள 61-வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை அக்டோபர் மாதம் தொடங்க ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது, 


இந்த படத்திற்கு தலைப்பு வளவன் அல்லது வாமனன் ஆக இருக்கலாம் என தகவல் கசிந்து உள்ளது .


The title of Ajith 61st film is Valavan or Vamanan

Actor Ajith has many fanatical fans in Tamil cinema. Though there is little information about actor Ajith, it is customary to make it a global trend. The photo of him in public will be a treat for the fans for a week if they get something called the photo he took with them.

அஜித் 61-வது படத்தின் தலைப்பு வளவன் அல்லது வாமனன், The title of Ajith 61st film is Valavan or Vamanan


Ajith is acting in H. Vinod directed movie Valimai. The film is being produced by Bonnie Kapoor. The film also has Neerav Shah as cinematographer and Yuvan Shankar Raja as composer.


Ajith Kumar is paired with Bollywood actress Huma Qureshi and Telugu actor Karthikeyan as the villain. Most of the shooting for Valimai is over. Filming for the sequel is in full swing in Hyderabad, with the shooting of the strength film stalled due to the Corona curfew. The crew, who have not released any information about the film for almost two years, have now released the Motion Poster First Look poster last Sunday.


Meanwhile, the crew plans to bring the movie Valimai to the screen for Diwali. The release date is yet to be announced.


In this case, a major update has been released. What it is is that information about Ajith's 61st film was released recently. Accordingly, H. Vinod is going to direct this film too. It has been reported that H. Vinod, who has already directed films like Ajith's Interview and Strength, is planning to form an alliance with Ajith again.


Accordingly, information has come out about when the shooting of the 61st film starring Ajith will start. The film is set to start shooting in October.


Information has been leaked that the title of the film may be Valavan or Vamanan

கருத்துகள் இல்லை

எங்கள் வலைப்பதிவின் அன்பான வரவேற்பு, எங்கள் சேவைகளை மேம்படுத்துவதற்கு எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பதிவுசெய்து(COMMENT) AND (SUBSCRIBE) , பகிர்ந்து கொள்ளுங்கள் (SHARE). மிக்க நன்றி.

"நன்றி"